உயர் இரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சனை ஏற்படுகிறது. மேலும், பதட்டம், மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற மனநலப் பிரச்சனைகள், அதிக அளவில் மது அருந்துதல், புகைபிடித்தல், போதைப்பொருள் போன்றவற்றை எடுத்துக்கொள்வதாலும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சனை ஏற்படுகிறது. ஆண்களுக்கு வயது ஆவதும் அவர்களது ஆண்மை குறைவுக்கு காரணமாக அமையலாம்.