டிஜிட்டல் யுகத்தில் செல்போன், கணினி போன்ற சாதனங்களை அனைவரும் பார்க்கின்றனர். அதிக நேரம் திரையை பார்ப்பது கண்களை பாதிப்பதோடு தலைவலி, கண் எரிச்சல் போன்றவைகளை ஏற்படுத்தும். கணினி திரைகளை குறைந்தபட்சம் 25 அங்குலம் / முழங்கை நீளம் தள்ளி வைத்து பார்க்கலாம். ஸ்மார்ட்போனை உங்கள் கண்களில் இருந்து குறைந்தது 20 அங்குல தூரத்தில் வைத்து பயன்படுத்துவது நல்லது. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் டிஜிட்டல் திரையை பார்ப்பதை தவிர்க்கலாம்