திருச்சியில் 15 வயது சிறுமி, ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட நிலையில், இரவு தூக்கத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு முழுவதும் காலாவதியான உணவு பொருட்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், தேனியில் நடத்தப்பட்ட ஆய்வில், பெட்டி பெட்டியாக காலாவதியான சிப்ஸ் பாக்கெட்கள், குடோன்களில் வைத்திருந்த குடிநீர் பாட்டில்கள், உணவு பொருட்களை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி சீல் வைத்த உணவு பாதுகாப்பு துறையினர் 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.