திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அருள்மிகு ஸ்ரீ வரசக்தி விநாயகர் ஆலயம், அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலய கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்நிகழ்வில் வந்தவாசி, மாம்பட்டு, அரசூர், பிருதுர், மும்முனி, அமையப்பட்டு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.