ஸ்ரீமூங்கில் அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

61பார்த்தது
ஸ்ரீமூங்கில் அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த விளாங்காடு கிராமத்தில் உள்ள கிராம தேவதை ஸ்ரீமூங்கில் அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், கணபதி பூஜை, தனபூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குராா்பணம், கும்ப அலங்காரம், அஷ்டபந்தனம் சாற்றுதல், பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், நேற்று காலை தத்வாா்ச்சனை, யாத்ராதானம், மகா பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. சிவாச்சாரியா்கள் கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோயிலை வலம் வந்தனா்.

இதைத் தொடா்ந்து காலை 9 மணிக்கு மேல் 10. 30 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி