திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அமையப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று ஆடி கிருத்திகை முன்னிட்டு பக்தர்கள் பால் காவடி, புஷ்ப காவடி எடுத்தும் பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்ற தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.