பெண்குழந்தைகள் காப்போம்: விழிப்புணர்வு கருத்தரங்கம் & மனித சங்கிலி உறுதிமொழி
வந்தவாசி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணி திட்டம் சார்பில் 6 ஆம் நாளான சத்யா நகர் மலைவாழ் மக்கள் பகுதியில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் கருத்தரங்கம் மற்றும் மனித சங்கிலி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு தலைமை ஆசிரியை பொ. பத்மாவதி தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியைகள் சாந்தி, சுபத்ரா, வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் கோமதி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன் பங்கேற்று, பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் யுரேகா திட்ட மேற்பார்வையாளர் முருகன், பட்டதாரி ஆசிரியை சுதா, ஆனந்தி ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர். இறுதியில் முதுகலை ஆசிரியை உஷா நந்தினி நன்றி கூறினார்.