திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணம் நடத்தினால், திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் போலீசால் FIR பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் எச்சரித்தார். மனுநீதி நாள் முகாமில் அவர், இளம் வயது திருமணங்களை 1098 எண்ணில் புகார் செய்யலாம் என்றும், அதற்கான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.