போளூரில் தவெக கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

64பார்த்தது
போளூரில் தவெக கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை நிலையச் செயலகத்தில் கட்சிக் கொடியை அக்கட்சித் தலைவா் விஜய் வியாழக்கிழமை காலை 9. 15 மணிக்கு உறுதிமொழி எடுத்த பின்னர் கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு, கொடிக்கம்பத்தில் தயார் நிலையில் இருந்த கொடியை விஜய் ஏற்றி வைத்தார்.

இந்நிலையில் அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிலையம் எதிரே தமிழக வெற்றிக் கழக நகர செயலாளர் திவாகர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்வில் நகர இளைஞரணி நிர்வாகி யுவராஜ், நகர பொருளாளர் சரவணன் மற்றும் யோகேஷ், தமிழ், அஜித், சுபாஷ், ராமச்சந்திரன், அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி