திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைவர் செண்பகம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சித்ரா முன்னிலை வகித்தார். ஆசிரியர் பிரதிநிதி மணிமேகலை வரவேற்றார்.
மாணவர் சேர்க்கை மற்றும் இடைநிற்றலை தவிர்த்தல் குழு, உள் கட்டமைப்பு குழு, விழிப்புணர்வு பிரசாரக் குழு, உணவு மற்றும் நலத்திட்டக் குழு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக் குழு ஆகிய ஐந்து துணை குழுக்களை அமைத்து பொறுப்பாளர்களை தலைமை ஆசிரியர் முருகன் நியமித்தார்.
இந்த மாத இறுதிக்குள் பெற்றோர் கூட்டம் மற்றும் 2023-24-ம் ஆண்டிற்கான பள்ளி மானியத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை அவர் முன்மொழிந்து பேசினார். பின்னர் தீர்மானங்கள் ஒருமனதாக ஏற்கப்பட்டன. இதில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் இல்லம் தேடிக்கல் வித்திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.