பராமரிப்பு பணி: கோவையில் ரயில் சேவைகள் இன்று ரத்து

85பார்த்தது
பராமரிப்பு பணி: கோவையில் ரயில் சேவைகள் இன்று ரத்து
கோயம்புத்தூர்: வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் காரணமாக இன்று (மார்ச் 16) ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையம்-போத்தனூர், போத்தனூர்-மேட்டுப்பாளையம், ஆலப்புழை - தன்பாத் உள்ளிட்ட ரயில் சேவைகள் ரத்தாகியுள்ளது. அதேபோல் எர்ணாகுளம்-பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) போத்தனூர்-இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால் அந்த ரயில் கோவை ரயில் நிலையம் செல்லாது எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி