தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இயற்கை எரிவாயு நிறுவன ஊழியரான தந்தை இந்த கொடூரத்தை செய்துள்ளார். 2 மகன்களையும் வாளியில் நிரப்பப்பட்ட தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுவிட்டு, வீட்டின் அறையில் தூக்கில் தொங்கியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்றையும் போலீசார் மீட்டனர்.