சுகாதார நிலையத்தில் அதிரடி ஆய்வு

66பார்த்தது
சுகாதார நிலையத்தில் அதிரடி ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்வி நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று செய்யார் சார் ஆட்சியர் பல்லவி வர்மா நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் மருந்துகள் இருப்பு குறித்தும், செவிலியர்களின் வருகை பதிவேடு குறித்தும், ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி