கலசபாக்கம் - Kalasapakkam

தி.மலை: பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி; 2 பேர் கைது

தி.மலை: பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி; 2 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், மகாஜனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மேத்தா. இவரது மகன் விஜய் ஈஸ்வர் பிரபாகரன். இவர், கீழ்கொடுங்காலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மகள் ஜெயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  விஜய் ஈஸ்வர் பிரபாகரன் ஜெயஸ்ரீயை திருமணம் செய்து கொண்டதை விரும்பாத அவரது தம்பியான அஜய்மதி, அக்காவின் மாமனார் குடும்பத்தினருடன் தகராறு செய்ததில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அக்கா ஜெயஸ்ரீ மாமனார் வீட்டில், அவரது சகோதரர்கள் பெட்ரோல் குண்டு (பாட்டில்) வீசிச் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.  இதில், மேத்தாவின் கை மற்றும் கால்களில் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து அவர் தூசி போலீஸில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு ஆகியோர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக, ஜெயஸ்ரீயின் தம்பி அஜய்மதி (22), சித்தப்பா மகன் விக்னேஷ் (20) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை