திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு கரும்பு, மற்றும் பழரச சாறுகளை வழங்கினார். உடன் துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, திமுக மாநில மருத்துவரணி துணைத்தலைவர் டாக்டர் எ. வ. வே. கம்பன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா. ஸ்ரீதரன், திருவண்ணாமலை திமுக நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், திமுக கட்சி நிர்வாகிகள் ராஜாங்கம், கண்ணதாசன், வெங்கட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.