திருவண்ணாமலை தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று காலை திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை மாவட்ட விசிக செயலாளர்
ச. நியூட்டன் தலைமையில் நடைபெற்றது. வக்ஃப் திருத்த சட்ட மசோதா கண்டித்து திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய ஒன்றிய அரசே!
வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு என கோஷமிட்டனர். இதில் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் A. R. நாசர் உசேன், மமக மாவட்ட செயலாளர் M. கலிமுல்லா, உட்பட மாவட்ட துணை, அணி நிர்வாகிகள் திருவண்ணாமலை நகரம், செங்கம் நகர நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.