திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன், முதியோா், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 628 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. இராம்பிரதீபன், வருவாய்க் கோட்டாட்சியா் ஆா். மந்தாகினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் து. செந்தில்குமாரி, முன்னோடி வங்கி மேலாளா் கெளரி, பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி எம். இளஞ்செழியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.