ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பக்தர்களுக்கு நீர்மோர்

69பார்த்தது
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களை கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து காக்கும் வகையில் மூலவர் ரெங்கநாதர் மூலஸ்தானம் அருகில் பக்தர்களுக்கு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கோயில் இணை ஆணையர் செ.சிவராம்குமார் தொடங்கி வைத்தார். கோடை காலம் முழுவதும் நீர்மோர் வழங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் பக்தர்கள் சிரமம் இன்றி நடந்து செல்ல கோயில் வளாகம் முழுவதும் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி