திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வந்தவாசி நகரப்பகுதியில் திமுகவிற்கு அதிக வாக்குகள் பெற்றுத்தந்த வட்ட செயலாளர்கள் கெளரவிக்கும் நிகழ்ச்சி மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட செயலாளரும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான எம் எஸ் தரணிவேந்தன் தலைமையில் நடைபெற்றது. நகர திமுகவைத் தலைவர் அ நவாப் ஜான் முன்னிலை வகித்தார்.
நகர திமுக செயலாளர் எ. தயாளன்
அனைவரையும் வரவேற்றார்
சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத்குமார், கடந்த நாடாளு மன்ற தேர்தலில், திமுகவின் வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு அதிக வாக்குப் பெற்றுத்தரும் வார்டுகளின் திமுக வட்ட செயலாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி
முதலிடம் பெற்ற வந்தவாசி 8 ஆவது வார்டின் வட்டச் செயலாளர் சாகுல் அமீதிடம் ஒரு சவரன் மோதிரமும், இரண்டாவது இடம்பெற்ற 3 - ஆவது வார்டு வட்டச் செயலாளர் அப்துல் ரசூலிடம் அரை சவரன் மோதிரமும், மூன்றாம் இடம் பெற்ற -4 -ஆவது வார்டு வட்டச் செயலாளர் நூர்முகம்மதிடம் கால் சவரன் மோதிரமும் வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணி வேந்தன் , சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர். மற்ற வார்டு கிளைச் செயலாளர்களும் பொன்னாடை போர்த்தி பாராட்டப்பட்டனர்.