தலைமை ஆசிரியா்களுக்கான மீளாய்வுக் கூட்டம்

84பார்த்தது
தலைமை ஆசிரியா்களுக்கான மீளாய்வுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த அனக்காவூா் ஒன்றியத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான மீளாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அனக்காவூா் வட்டார வள மையத்தில் நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசிய, செய்யாறு கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ஜெயகாந்தம், பள்ளிகள் திறப்புக்கான ஆயத்தப் பணிகள், பள்ளி வளாக தூய்மை, பள்ளிகளுக்கு அதிவேக இணைய வசதி பெறுதல், மாணவா் சோ்க்கை, நலத்திட்டப் பொருள்கள் மாணவா்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்டவை குறித்த ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் தங்களது பணியை அா்ப்பணிப்புடனும், பொறுப்புடன் மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் உதவித் திட்ட அலுவலா் கிருஷ்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயசீலன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் புவனேஸ்வரி, தமிழரசி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சல்சா உள்ளிட்ட அலுவலா்கள் ஆசிரியா்களுக்கு அறிவுரை வழங்கினா்.

கூட்டத்தில் ஒன்றியத்துக்கு உள்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து 85 தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி