கரீபியன் கடலில் கேமன் தீவுகள் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் ரிக்டர் அளவு 8ஆக பதிவாகியுள்ளது. ஹோண்டுராஸுக்கு வடக்கே சுமார் 32 கி.மீ., தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கொலம்பியா, கேமன் தீவுகள், கோஸ்டாரிகா, நிகரகுவா உள்ளிட்ட தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.