திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அருகே பெருந்துறைப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பல்வேறு துறைகளில் சார்பாக அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பயனாளிகளுக்கு இன்று வழங்கினார். உடன் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.