திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (அக்.17) அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகளை தவிர மற்ற அனைத்து பள்ளி, கல்லூரிகளும் வழக்கம்போல் நாளை செயல்படும். பள்ளி வளாகத்தில் மரங்கள் முறிந்து விழுந்திருந்தாலோ, மழை நீர் தேங்தி இருந்தாலோ உடனடியாக அகற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.