மீண்டும் துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்

76பார்த்தது
மீண்டும் துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்
துருக்கியில் இன்று (அக்.16) 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.46 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1.24) இந்த நிலநடுக்கம் மலாத்யா மாகாணத்தில் உள்ள காலே என்ற நகரில் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் சேதம் இருக்கும் என அச்சம் நிலவிய நிலையில், அதிக அளவில் சேதம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 49 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி