தமிழக பொதுப்பணித்துறை (ம) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு அறிவுறுத்தலின்படி , திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் தொகுப்பு வீடுகள் சீரமைக்க 21 ஊராட்சிகளை சேர்ந்த 167 பயனாளிகளுக்கு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் ஆணை வழங்கினார். உடன், கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.