நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்

58பார்த்தது
நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியத்திற்க்குட்பட்ட, பெருந்துறைப்பட்டு ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் மனுநீதிநாள் திட்ட விழாவில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி கலந்து கொண்டு திராவிட மாடல் அரசின் திட்டங்களை எடுத்துரைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
ஒன்றிய செயலாளர்கள் இரமேஷ், கோவிந்தன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் வேலு, மு. ஒன்றிய செயலாளர் ஜெயராமன், ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், மாவட்ட கவுன்சிலர் சத்யா வெங்கடேசன், மாவட்ட பிரதிநி புகழேந்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாஸ்கரன், சிவரஞ்சணி மணிகண்டன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி