ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கர் தன் மீது எழுந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். எங்கு சென்றாலும் 2 பதக்கங்களையும் எடுத்துச் சென்று காட்டிக் கொண்டிருப்பதாக அவர் மீது விமர்சனம் எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள மனு பாக்கர், தான் வென்ற 2 பதக்கங்களும் இந்தியாவுக்கானது. இதை எங்கு சென்று காட்டச் சொன்னாலும் அதை பெருமையோடு காட்டுவேன். என்னுடைய வெற்றியை பகிர்ந்து கொள்ள அழகான வழி இதுதான்” என கூறியுள்ளார்.