பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

57பார்த்தது
பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் பௌர்ணமி கிரிவலம் இன்று (செப்.,17) நடைபெறவுள்ளது. இந்த கிரிவலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக 2 சிறப்பு ரயில்கள் விழுப்புரத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

விழுப்புரத்திலிருந்து இன்று (செப்.,17) காலை 9. 15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வ. எண். 06130) முற்பகல் 11 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும் எதிர்வழித்தடத்தில் திருவண்ணாமலையிலிருந்து இன்று பிற்பகல் 12. 40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை -விழுப்புரம் சிறப்பு ரயில் (வ. எண். 06129), பிற்பகல் 2. 15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

இதுபோல, விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று (செப்.,17) இரவு 9. 15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வ. எண். 06131) இரவு 10. 45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும். எதிர்வழித்தடத்தில் புதன்கிழமை (செப். 18) அதிகாலை 3. 30 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்படும் திருவண்ணாமலை -விழுப்புரம் சிறப்பு ரயில் (வ. எண் 06132) அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி