கல்லூரி விவகாரம் குறித்து இசையமைப்பாளர் டுவீட்

55பார்த்தது
கல்லூரி விவகாரம் குறித்து இசையமைப்பாளர் டுவீட்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் காலை, மதியம் என இரண்டு ஷிப்ட்டாக சுமார் 8000 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

அரசு கல்லூரி: இந்த கல்லூரியில் உள்ள பெண்கள் கழிப்பறை நீண்ட நாட்களாக பயன் பாடின்றி உள்ளதாக தெரிகிறது. இந்த கழிவறையில் சில மாணவிகள் சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த கழிவறையில் சாரை சாரையாக பாம்புகள் நெளிந்து கொண்டிருப்பதை கண்டு அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார்கள். இதை பற்றி மற்ற மாணவர்களிடம் இது குறித்து அதிர்ச்சியுடன் சொல்லி உள்ளனர். இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் "இந்த கழிப்பறையில் பாம்புகள் உலா வருவதால், யாரும் இந்த கழிப்பறையை பயன்படுத்த வேண்டாம்" என்று வெள்ளை கலர் பேப்பரில் எழுதி கழிப்பறை சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளது.!! இந்த சம்பவம் குறித்து பிரபல இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ்குமார் அவரது எக்ஸ் பக்கத்தில்' தங்கள் கடமையை செய்யாதவர்களை பெண் கல்வி சுட்டெரிக்கும் 'என்று தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி