தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதை முன்னிட்டு இன்று (செப். 29) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி திமுக சார்பில் முன்னாள் எம். எல். ஏ. சிவானந்தம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதில் தட்சிணாமூர்த்தி, ஜெயராணிரவி, ஏ. சி. மணி, எஸ். எஸ். அன்பழகன், எம். சுந்தர், துரைமாமது உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.