ஆரணியை அடுத்த எஸ். வி. நகரம் ராகவேந்திரா உத்தர மடத்தில் செவ்வாய்க்கிழமை(செப்.3) இரவு உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து மடத்தைச் சோ்ந்த சங்கா், ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் மடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுவன் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவனை கைது செய்து, கடலூா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்த்தனா்.