திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் சேவூரில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்று வருகின்றன.
கடந்த செப் 28-ந் தேதி துவங்கிய இம்முகாமில் தினமும் பள்ளி தூய்மை செய்தல், சேவூர் ஜெயின் கோயில் தூய்மை செய்தல், மரக்கன்று நடுதல் ஆகியவற்றை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று அக் 4 நிறைவு நாளை முன்னிட்டு சேவூர் ஏரிக்கரை அருகே பனை விதைகளை நட்டனர். இதில் ஆரணி அரிமா சங்க தலைவர் மோசஸ் தலைமை தாங்கினார். அனைவரையும் சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முருகன் வரவேற்றார். அரிமா சங்க துணை ஆளுநர் உதயசூரியன், வேலூர் டான்போஸ்கோ பள்ளி தலைமையாசிரியர் பலவேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மேலும் இதில் அரிமா சில்க் சிட்டி மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ்பாபு, பி. நடராஜன் அரிமா சங்க செயலாளர் முருகானந்தம், பொருளாளர் பரசுராமன், அரிமா சங்க நிர்வாகிகள் எம். என். சேகர், சுகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கலைவாணி நன்றி கூறினார்.