திருவள்ளூரில் இன்று இந்தாண்டின் அதிகபட்ச வெப்பநிலை பதிவு!

83பார்த்தது
திருவள்ளூரில் இன்று இந்தாண்டின் அதிகபட்ச வெப்பநிலை பதிவு!
நேற்று கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 112 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், திருவள்ளூரில் இந்த ஆண்டு அதிகபட்சமாக இன்று 112 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், வேலூர் 111, திருத்தணி 108, திருவண்ணாமலை 106, ஈரோட்டில் 105, சென்னை 104, மதுரை, 104, திருச்சி 103, நாகை 101 டிகிரி ஃபாரான்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அக்னி வெயில் முடிவுற்ற போதும் தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி