ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் நேற்று (டிச.9) மதியம் 5 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த தேசிய மீட்பு படையினர், விரைந்து சென்று சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக குழாய் மூலம் சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டுள்ள கேமராவின் மூலம் சிறுவனின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.