கேரளா: பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே காதலிக்கு வீடியோ கால் செய்து இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெர்மன் மொழி படிக்க வந்த இடுக்கி குமளியை சேர்ந்த அபிஜித் என்பவர் வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். திருவல்லாவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுடன் அபிஜித் பழகி வந்துள்ளார். இதனிடையே இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நேற்று (டிச., 09) அபிஜித், காதலிக்கு வீடியோ கால் செய்துகொண்டே தூக்கிட்டு தற்கொலை செய்தார்.