உடுமலை: காண்டூர் கால்வாய் சுற்றி கம்பி வேலி அமைக்க கோரிக்கை

66பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் முக்கிய நீர்வரத்தான காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு அணை நிரம்பியதும் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் காண்டூர் கால்வாய் சுற்றி கம்பி வேலி அமைக்கப்படாத நிலையில் வனவிலங்குகள் அடிக்கடி கால்வாயில் விழுந்து உயிரிழப்பும் மற்றும் தற்கொலை செய்து கொள்வதும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறையினர் குறிப்பிட்ட தூரத்திற்கு கம்பி வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி