மத்தியப் பிரதேச மாநிலத்தில் நேற்று (மார்ச் 18) 19 வயது இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்தது. இதில், அவரது அந்தரங்க உறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காய்கறி வாங்கிவிட்டு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது பேண்ட்டில் இருந்த செல்போன் வெடித்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. விசாரணையில், இளைஞர் வைத்திருந்தது செகண்ட் ஹேண்ட் செல்போன் எனவும் அதை சில தினங்களுக்கு முன்பு தான் அவர் வாங்கியதும் தெரியவந்துள்ளது.