உரிமையாளரை கடித்துக் குதறி கொன்ற நாய்

81பார்த்தது
உரிமையாளரை கடித்துக் குதறி கொன்ற நாய்
உத்தரபிரதேசத்தில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று தனது உரிமையாளரையே கடித்து குதறி கொலை செய்துள்ளது. கான்பூரில் 91 வயது மூதாட்டி ஒருவர் தனது மருமகள் மற்றும் பேரனுடன் வசித்து வந்துள்ளார். பேரன் வளர்த்து வந்த நாய் சில நாட்களுக்கு முன்பு மூதாட்டியின் முகம், கழுத்து, வயிறு மற்றும் உடலின் பல பகுதிகளை கடித்து குதறியுள்ளது. படுகாயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.