திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சர்வதேச
உலக புலிகள் தினத்தை முன்னிட்டு நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலத்தை திருப்பூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா கொடியசைத்து துவக்கி வைத்து புலிகள் பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்து பேசினார்.
பேரணி நேதாஜி விளையாட்டு மைதானத்தில் துவங்கி ராஜேந்திர ரோடு புதிய பஸ் நிலையம் பழைய பஸ் நிலையம் தளி ரோடு வழியாக உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள் புலி வேடம் அணிந்து நடனம் ஆடியும் , புலியின் முகமூடிகள் அணிந்து பொதுமக்களுக்கு புலியின் பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு சென்றனர் பேரணியில் உடுமலை வனச்சரகர் மணிகண்டன் மற்றும் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.