உடுமலை: மாணவி தாக்கப்பட்ட சம்பவம்; கல்வி அதிகாரி விசாரண

64பார்த்தது
உடுமலை: மாணவி தாக்கப்பட்ட சம்பவம்; கல்வி அதிகாரி விசாரண
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அரசு விடுதியில் கேரளா மாநிலம் மூணாறை சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி இருந்து ராஜேந்திரா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் திருப்புதல் தேர்வில் அக மதிப்பெண் தொடர்பான பணியை மாணவி செய்யவில்லை என்று கூறி ஆசிரியர் அளித்ததாக தெரிகிறது. மாலை விடுதிக்கு வந்த மாணவி வலியால் அவதிப்பட்டு உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக முதலுதவி அளிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் வலி அதிகமாக இருந்ததால் வேறு வழியின்றி மாணவியை உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இது குறித்த தகவல் அவரது பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களும் உடுமலைக்கு வருகை தந்தனர். இந்த நிலையில் மாணவியும் சிகிச்சைக்குப் பின்னர் விடுதிக்கு திரும்பினார். 

இதற்கிடையில் மாவட்ட கல்வி அதிகாரி பள்ளிக்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டார். அப்போது மாணவி தரப்பிலும் ஆசிரியர் தரப்பிலும் நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவி மற்றும் பெற்றோரிடம் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மன்னிப்பு கேட்டதாக மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்தார். 

இருப்பினும் இது குறித்த அறிக்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாணவி தாக்கப்பட்ட சம்பவம் பள்ளியிலும் உடுமலையிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி