மனைவிகளை வாடகைக்கு கொடுக்கும் விநோத வழக்கம் மத்திய பிரதேசத்தின் சிவபுரி கிராமத்தில் இருக்கிறது. மனைவி அல்லது துணையை கண்டுபிடிக்க முடியாத பணக்கார ஆண்கள் அந்த கிராமத்தில் இருக்கும் பெண்களை ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு வருடத்திற்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இதனை அப்பெண்களின் தகப்பன் அல்லது கணவன் ரூ.10 மதிப்புள்ள முத்திரைத் தாள்களில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு செய்கின்றனர்.