உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முதற்கட்ட கலந்தாய்வில் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியலில் 1 முதல் 2000 வரையிலான இடங்களைப் பெற்றிருந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
வேதியியல் பிரிவில் 10 மாணவர்களும், தாவரவியல் பிரிவில் 01 மாணவரும், கணிதவியல் பிரிவில் 10
மாணவர்களும், கணினிஅறிவியல் பிரிவில் 14 மாணவர்களும், அரசியல்அறிவியல் பிரிவில் 13 மாணவர்களும், புள்ளியியல் பிரிவில் 05 மாணவர்களும், பொருளியல்பிரிவில் 07 மாணவர்களும், பி. காம் பிரிவில் 51 மாணவர்களும், பிகாம் (சிஏ) பிரிவில் 71 மாணவர்களும், பிகாம் (இ. காம்) பிரிவில் 24 மாணவர்களும், பிபிஏ பிரிவில் 31 மாணவர்கள் என மொத்தம் 237 மாணவர்கள் சேர்ந்தனர்.
இன்று 2001முதல் 4000 வரையிலான தரவரிசை பெற்றிருக்கும் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற வருகைதரும் மாணவர்கள் 10 -ம் வகுப்பு , பிளஸ் 1, பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் , சாதிச்சான்றிதழ் , மாற்றுச் சான்றிதழ் , ஆதார் அட்டை ஆகிய அசல் சான்றிதழ்கள் மற்றும் மூன்று நகல்கள், உரிய கல்விக் கட்டணம் , இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல் , மாணவரின் தரவரிசை இடம்பெற்ற கல்லூரி இணையதளப் பக்கத்தின் நகல்
ஆகியவற்றுடன் பெற்றோரையும் அழைத்து வர வேண்டும். மேலும் , விவரங்களுக்கு கல்லூரியின் www. gacudpt. in என்ற இணைய தளத்தை பார்வையிடுமாறு கல்லூரி முதல்வர் முனைவர் சோ. கி. கல்யாணி தெரிவித்து உள்ளார்.