ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், இன்று (டிச., 21) GST கவுன்சிலின் 55வது ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் 148 கைக்கடிகாரங்கள், காலணிகள், உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி விகிதத்தை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மருத்துவ, ஆயுள் காப்பீடு தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிப்பது பற்றியும் இன்று முடிவு எடுக்கப்படும்.