முதலில் உங்களுக்கு மெயில் அல்லது SMS வரும். அதில் போலியான அரசாங்க முத்திரைகள் அல்லது லோகோக்கள் இருக்கலாம். அதன்பின் உங்களை தொடர்பு கொண்டு, அரசுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். உங்கள் பெயரில் உள்ள சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றியுள்ளோம் என கூறுவார்கள். நீங்கள் அழைப்பை துண்டித்தால் மீண்டும் மீண்டும் அழைத்து மிரட்டுவார்கள். இதற்கு பயந்து உங்கள் வங்கி கணக்கின் விவரம், ஆதார் எண், ஓடிபி ஆகியவற்றை பகிர வேண்டாம். உடனே 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்கவும்