உடுமலை மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை

5078பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கி 25ஆம் தேதி தேரோட்டத்துடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில் நேற்று கோவிலில் உள்ள 11 தற்காலிக உண்டியல்கள் 4 நிரந்த உண்டியல்கள் திறக்கப்பட்டன. இந்த உண்டியல்கள் மூலமாக 11 லட்சுத்து 1,225 ரூபாயும், 55 கிராம் தங்கம், வெள்ளி 120 கிராம் வசூல் ஆனது. அதேபோல தற்காலிக உண்டியில் மூலம் 4 லட்சத்து 16 ஆயிரத்து 518 ரூபாய் வசூல் ஆனது மொத்தம் 15 லட்சத்து 17 ஆயிரத்து 518 ரூபாய் வசூல் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பாரம்பரிய அறங்காவலர் யு எஸ் எஸ் ஸ்ரீதர், இந்து சமய அறநிலைத்துறை மடத்துக்குளம் ஆய்வாளர் சரவணகுமார், கோவில் செயல் அலுவலர் தீபா மற்றும் குமரேசன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி