நடிகர் ஜெய் மற்றும் நடிகை பிரக்யா நாக்ரா திருமணம் செய்துகொண்டுள்ளதாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் புகைப்படத்தை நன்கு கவனித்தோம் என்றால் அவர்கள் அமர்ந்துள்ள கார்க்கு பின்னால் கேமராவோடு படக்குழுவினர் இருப்பதாக தெரிகிறது. அதே சமயம் அவர்கள் பதிவிட்ட அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உள்ள புகைப்படத்தில் கடவுளின் ஆசீர்வாதோடு புதுவாழ்வு ஆரம்பம் என்ற கேப்சன் வைத்திருப்பது ரசிகர்களிடையே இது உண்மையில் திருமணமா அல்லது மூவி ப்ரோமோஷனா என குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.