நாசர் பெயரில் நிதி மோசடி - நடிகர் சங்கம் புகார்

77பார்த்தது
நாசர் பெயரில் நிதி மோசடி - நடிகர் சங்கம் புகார்
நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசர் பெயரில் போலி சமூகவலைதள கணக்குகள் மூலம் நடிகர் சங்க கட்டிடத்துக்கு பொதுமக்களிடம் நிதி பெறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக தலைவர் நாசர் பெயரில் சில விஷமிகள் அவர்களது முகநூல் மற்றும் எக்ஸ் தளத்தில் போலியாக விளம்பரப்படுத்தி பொதுமக்கள் பார்வையில் சங்கத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் போலியான விளம்பரம் கொடுத்த நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி