கள்ளத்தொடர்பு: மகள் தலையை துண்டாக்கிய தந்தை

29097பார்த்தது
கள்ளத்தொடர்பு: மகள் தலையை துண்டாக்கிய தந்தை
நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கொம்பையா, இவரது மனைவி முத்துப்பேச்சி. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்துப்பேசி தனது தந்தை மாரியப்பன் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது அவரது உறவினர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை மாரியப்பன் கண்டித்தும் கேட்காமல் அந்த நபருடன் தொடர்பில் முத்துப்பேச்சி இருந்துள்ளார். இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் தனது மகளை அழைத்து சென்ற மாரியப்பன் தான் வைத்திருந்த அரிவாளால் ஓடஓட விரட்டி அவர் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரியப்பனை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி