தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (மே 20) கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெய்த கனமழை காரணமாக பாறைக்கா மடம் பகுதியில் உள்ள ஓடை நிரம்பியது. அதில் இருந்து வெளியேறிய சாக்கடை கலந்த மழை நீர் அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், சாக்கடை நீரை அகற்ற தொடர்ந்து மாநகராட்சிக்கு பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.