நாடாளுமன்ற வளாகத்தில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பேட்டியளித்தார். அப்போது, “நாடாளுமன்றத்திற்கு நாங்கள் அணிந்து சென்ற 'தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டை மாற்ற வேண்டும் என சபாநாயகர் அறிவுறுத்துகிறார். ஆனால், ஆளும் கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் இதுபோன்று அணிந்து வந்திருக்கிறார்கள். உரிமைக்காக குரல் கொடுக்கும் உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து விட்டு எதிர்க்கட்சிகளே இல்லாமல் அவையை நடத்த வேண்டும் என விரும்பினால் தாராளமாக அவையை நடத்தட்டும்” என்றார்.